spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 38 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், இன்று 39வது லீக் போட்டி நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 39வது லீக் போட்டியில் ரூத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 4வெற்றி 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது முதலாவது இடத்திலுள்ளது. லக்னோ அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 4 வெற்றி 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 1 முறையும் லக்னோ அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது. நடப்புத் தொடரில் கடந்த 34வது லீக் போட்டியில் இரு அணிகளிலும் மோதிய ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்திருந்தது. தற்போது சென்னை அணி உள்ளூரில் அதற்கு பதிலடி கொடுக்குமா என ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னை அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாடும் அஜிங்கியா ரஹானேவும் களமிறங்கவுள்ளனர்.

 

Video thumbnail
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் திடீரென வீசிய புழுதிப் புயலால் புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
01:08
Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
Video thumbnail
இப்போதும் தமிழ்நாட்டை ஆள்பவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
01:48
Video thumbnail
அம்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீர் மின் தடை
01:11
Video thumbnail
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்த அன்புமணி, சௌமியா அன்புமணி..!
00:35
Video thumbnail
நீதிமன்ற வளாகத்தில் விவாகரத்து மனுவை கிழித்தெறிந்து, கணவருடன் சேர்த்த மனைவி
00:58
Video thumbnail
"தவெகவிற்கு ஆதரவளித்த கட்சிகள் மீது முதலமைச்சர் விஜய்-க்கு நம்பிக்கை இல்லையா?"
01:46
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img