spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 48 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 49வது லீக் போட்டி நடைபெறுகிறது. சென்னையில் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 49வது போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 5 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திலுள்ளது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 3 வெற்றி 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 15 முறையும் பஞ்சாப் அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த போட்டியில் கொல்கத்தா அணியை அபாரமாக வீழ்த்திய பஞ்சாப் அணி இப்போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும். அதே சமயம் சென்னை அணி தனது வெற்றியை தொடர முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னை அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்கியா ரஹானேவும் ருத்ராஜ் கெய்க்வாடும் களமிறங்கவுள்ளனர்.

Video thumbnail
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசு ரவுடி போல் செயல்படுகிறது; - பாமக தலைவர் அன்புமணி
01:55
Video thumbnail
"திமுக முழு ஆதரவு தருகிறது" - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
02:41
Video thumbnail
மேகதாது அணை குறித்த முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு - இபிஎஸ்
01:23
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம் #Tirupati #Samantha #RajNidimoru
00:55
Video thumbnail
என்னுடைய மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டார் - எடப்பாடி பழனிசாமி
01:12
Video thumbnail
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டமன்றம் தொடங்கியது; தேசிய கீதம் பாடக் கூடாது என்பது இல்லை;
01:18
Video thumbnail
சட்டமன்றத்திற்கு ஆளுநர் அர்லேக்கர் வருகை.. பூங்கொத்து கொடுத்து சபாநாயகர் JCD பிரபாகர் வரவேற்பு
01:59
Video thumbnail
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2026.. காவலர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் JCD பிரபாகர்
00:32
Video thumbnail
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2026.. முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வருகை!
00:51
Video thumbnail
தூத்துக்குடியில் கப்பல் கட்டுமான திட்டம்: ரூ.38,000 கோடி முதலீடு, 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு
00:20
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img