spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சென்னை அணியை வீழ்த்தியது பஞ்சாப்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 48 லீக் போட்டிகள் நடந்துள்ளன. நேற்று 49வது லீக் போட்டி நடைபெற்றது. சென்னையில் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 49வது போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னை அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அஜிங்கியா ரஹானே 29 ரன்னிலும் ருத்ராஜ் கெய்க்வாட் 62 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சிவம் துபே ரன் ஏதுமின்றியும் ரவிந்திர ஜடேஜா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 162 ரன்கள் எடுத்தது.

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி இரண்டாவது பேட்டிங் விளையடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரப்சிமரன் சிங் 13 ரன்களிலும் ஜானி பேர்ஸ்டோ 46 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரில்லி ரூசோ 43 ரன்களிலும் ஆட்டமிழக்க மறுபுறம் நிதானமாக ஆடிய சசாங் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் அணியானது 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் ஆட்டநாயகனாக ஹர்பீரித் பிரார் தேர்வு செய்யப்பட்டார்.

Video thumbnail
என்.எஸ்.கிருஷ்ணனின் புதுப்பிக்கப்பட்ட சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
00:52
Video thumbnail
லிப்ட் உள்ளே ஹீலியம் பலூன்கள் வெடித்து தீ விபத்து; நூலிழையில் உயிர் தப்பிய மூவர்
00:25
Video thumbnail
தூய்மை பணியாளர் பத்மாவுக்கு காலணிகள் அணிவித்து காலில் விழுந்து வணங்கிய நடிகர் பார்த்திபன்
00:47
Video thumbnail
'வித் லவ்' படத்தின் Pre Release-க்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
00:28
Video thumbnail
"திமுகவை வீழ்த்த TVK-வால் மட்டும்தான் முடியும்" - தவெக தலைவர் விஜய்
01:06
Video thumbnail
"அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு" - விஜய் பேச்சு
00:55
Video thumbnail
டப்பா என்ஜின் உள்ளிட்ட எந்த என்ஜின் வந்தாலும் டாப் என்ஜின் தவெக தான்
01:03
Video thumbnail
தமிழ்நாடு விழிப்புணர்வு பெற காரணம் திமுக தான்
01:02
Video thumbnail
சமூக நீதி என்றால் என்ன?
01:13
Video thumbnail
சமூக நீதி என்றால் என்ன? | தமிழ்நாடு முன்னேற்றத்திற்கு சமூக நீதி தான் காரணம்
12:19
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img