ருத்ராஜ் கெய்க்வாட் அபார ஆட்டம் – ஐதராபாத் அணிக்கு 213 ரன்கள் இலக்கு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 212 ரன்கள் குவித்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 44 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 46வது லீக் போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் பெங்களூரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னை அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அஜிங்கியா ரஹானே 9 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபுறம் களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் 98 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டேரில் மிட்செல் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசியில் அதிரடி காட்டிய சிவம் 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 212 ரன்கள் குவித்தது. பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஐதராபாத் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடவுள்ளது.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img