spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

துஷார் தேஷ்பாண்டே அபார பந்துவீச்சு – ஐதராபாத் அணியை வீழ்த்தியது சென்னை!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஐதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 44 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 46வது லீக் போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் பெங்களூரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னை அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அஜிங்கியா ரஹானே 9 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபுறம் களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் 98 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டேரில் மிட்செல் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசியில் அதிரடி காட்டிய சிவம் 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 212 ரன்கள் குவித்தது.

பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஐதராபாத் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 13 ரன்களிலுல் அபிஷேக் ஷர்மா 15 ரன்களிலும் ஆட்டமிழ்ந்தனர். அடுத்து களமிறங்கிய அல்மோல்பீரித் சீங் ரன் ஏதுமின்றியும் ஏய்டன் மார்க்ராம் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. சென்னை அணியில் பந்துவீச்சு தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இதனைத்தொடர்ந்து சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை அணியில் ஆட்டநாயகன் விருது ருத்ராஜ் கெய்க்வாடுக்கு வழங்கப்பட்டது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img