spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சஞ்சு சாம்சனின் அதிரடி வீண் – ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது டெல்லி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 55 லீக் போட்டிகள் நடந்துள்ளன. நேற்று 56வது லீக் போட்டி நடைபெற்றது. டெல்லி உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 56வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து டெல்லி அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடிய ஜாக் பிராஸர் மெகர்க் 50 ரன்களிலும் அபிஷேக் போரேல் 65 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சாய் ஹொப் ஒரு ரன்களிலும் அக்‌ஷர் பட்டேல் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடி காட்டிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 20 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 221 ரன்கள் குவித்தது.

பின்னர் 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யாஷ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும் ஜாஸ் பட்லர் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் 86 ரன்களிலும் ரியான் பராக் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 201 ரன்கள் எடுத்தது. பின்னர் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி அணியின் ஆட்டநாயகனாக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

Video thumbnail
சட்டப்பேரவையில் முதல்வர் சொன்ன குட்டிக்கதை..- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்
00:46
Video thumbnail
"அப்பாவை அங்க தேடாதீங்க" முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி
01:12
Video thumbnail
புதிய பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்து பெரம்பூர் செல்லும் 29A பேருந்தில் முதல்வர் விஜய் பயணம்
00:48
Video thumbnail
"2 நாளில் முக்கிய முடிவு.." வைகோ பரபரப்பு பேச்சு
02:27
Video thumbnail
குழந்தைகளுக்கு தங்க மோதிரம், பரிசுப் பெட்டகங்களை அமைச்சர் ஆனந்த் வழங்கினார்.
01:34
Video thumbnail
"இதனால் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.." அமைச்சர் அருண்ராஜ்
01:44
Video thumbnail
இனி நல்லதே நடக்கும் - பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த பின் அன்புமணி பேட்டி
00:34
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஹன்சிகா வழிபாடு
01:39
Video thumbnail
பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் தனது குடும்பத்தினருடன் சந்தித்தார் அன்புமணி..
02:14
Video thumbnail
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டண உயர்வு இல்லை.. - அமைச்சர் ரமேஷ்
01:34
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img