போராடி வீழ்ந்தது குஜராத் டைட்டன்ஸ் அணி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 39 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், இன்று 40வது லீக் போட்டி நடைபெற்றது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 40வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மான் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து டெல்லி அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 11 ரன்னிலும் ஜாக் பிராஸர் மெகர்க் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அக்‌ஷர் பட்டேல் 66 ரன்னிலும் சாய் ஹோப் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடி காட்டிய ரிஷப் பண்ட் 43 பந்துகளில் 88 ரன்கள் குவித்து அணியை 200 ரன்கள் கடக்க வைத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 224 ரன்கள் குவித்தது.

பின்னர் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுப்மான் கில் 6 ரன்னிலும் விருத்திமான் சஹா 39 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்ஷன் 66 ரன்னிலும் அதிரடியாக விளையாடிய மில்லர் 55 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் அணிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. ரஷித் கான் சிக்‌ஷர் பவுண்டரியும் அடித்து மிரட்டினார். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது முகேஷ் குமாரின் பந்து டாட் பாலானது. இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 220 ரன்கள் எடுத்த நிலையில், 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது. இதன் மூலம் டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது ரிஷப் பண்டுக்கு வழங்கப்பட்டது.

Video thumbnail
ரசிகர்களுக்கு கையசைத்தபடியே கோட் சூட்டில் ஸ்டைலாக வந்த விஜய்
00:34
Video thumbnail
Jananayagan Audio launch-க்கு cute ஆக வீடியோ வெளியிட்ட பூஜா
00:29
Video thumbnail
என்னையும், விஜயையும் பாஜக பெற்றெடுத்தபோது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார் -சீமான்
01:03
Video thumbnail
திருவண்ணாமலைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
02:50
Video thumbnail
மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டிற்காக கூடிய கூட்டம்
00:24
Video thumbnail
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி வளர்வதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தான் காரணம் - திருமா எம்.பி
01:39
Video thumbnail
கலை கண்ணாடி அல்ல; சமூகத்தை மாற்றும் சம்மட்டி - -மார்கழியில் மக்களிசை விழாவில் எம்.பி கனிமொழி பேச்சு
01:19
Video thumbnail
இங்க பா.ஜ.க.வும் அடிமைகளும் எத்தனை அந்தர் பல்டி அடிச்சாலும், பாச்சா பலிக்காது - CM மு.க.ஸ்டாலின்
01:28
Video thumbnail
கபில் தேவ், நடிகர் சிம்புவுக்கு பந்து வீசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! வைரலாகிவரும் வீடியோ!!
00:59
Video thumbnail
கிறிஸ்தவர்கள் மீது இந்து அமைப்புகள் தாக்குதல் | மௌனம் காக்கும் விஜய், சீமான் | TVK | Vijay | Seeman
13:10
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img