spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 39 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், இன்று 40வது லீக் போட்டி நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 40வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லியை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 3 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8வது முதலாவது இடத்திலுள்ளது. குஜராத் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 4 வெற்றி 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் டெல்லி அணி 2 முறையும் குஜராத் அணி 2 முறையும் சரிசமமாக வெற்றி பெற்றுள்ளன. நடப்புத் தொடரில் கடந்த 32வது லீக் போட்டியில் இரு அணிகளிலும் மோதிய ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்திருந்தது. தற்போது குஜராத் அணி அதற்கு பதிலடி கொடுக்குமா என ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மான் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து டெல்லி அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும் ஜாக் பிராஸர் மெகர்க்கும் களமிறங்கவுள்ளனர்.

 

Video thumbnail
"அஜித் வெளியே வந்தால்கூட ரசிகர் பட்டாளம் கூடும்; – திருமாவளவன்."
01:03
Video thumbnail
"எடப்பாடி, அன்புமணி, தினகரன் ஆகியோரை மிரட்டி கூட்டணியில் வைத்திருக்கிறது பாஜக – திருமாவளவன்"
02:06
Video thumbnail
தமிழ்நாட்டில் அதிமுக அழிந்துவிட்டது.. இப்போது இருப்பது பாஜகவின் முகமூடி" - ராகுல்காந்தி
25:30
Video thumbnail
விசில் கோலம் போட்ட விஜய்; பெரம்பூர் தொகுதியில் சர்ப்ரைஸ் விசிட்!
00:32
Video thumbnail
தொகுதி மறு சீரமைப்பைக் கண்டித்து மதுரவாயலில் தொகுதி அயப்பாக்கத்தில் திமுகவினர் போராட்டம்
01:14
Video thumbnail
தொகுதி மறுவரையறை மசோதா: நாசர் எரித்து எதிர்ப்பு #Avadi #DMK #Nasar
00:50
Video thumbnail
நெருப்பை பற்ற வைத்த ஸ்டாலின் | அதிரும் ஒன்றிய அரசு... தொகுதி மறுசீரமைப்பு என்னாகும்? | MK Stalin
09:47
Video thumbnail
மோடியை எச்சரித்த ஸ்டாலின்..
01:12
Video thumbnail
தியாகராய நகரில் பேசாமல் பிரச்சாரம் முடித்த விஜய்.. தவெக தொண்டர்கள் விஜயை பார்ப்பதற்காக ஓடி வந்தனர்
00:47
Video thumbnail
விஜய் பிரச்சார வாகன முன், இரு கைகள் விடுத்து ஆபத்தாக பைக் ஓட்டிய தவெக தொண்டர்.
00:56
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img