spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

டெல்லி அணியை வீழ்த்தியது ஐதராபாத் அணி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்று நடப்புத் தொடரில் தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 34 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், நேற்று 35வது லீக் போட்டி நடைபெற்றது. டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 35வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஐதராபாத் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி பந்தை நாலாபுறம் சிதறடித்த டிராவிஸ் ஹெட் 89 ரன்னிலும் அபிஷேக் ஷர்மா 46 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஏய்டன் மார்க்ராம் 1 ரன்னிலும் ஹென்ரிச் கிளாசன் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடியாக விளையடிய சபாஷ் அகமது 29 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அணியை 266 ரன்கள் கடக்க வைத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 266 ரன்கள் குவித்தது. பின்னர் 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் டெல்லி அணி விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 16 ரன்னிலும் டேவிட் வார்னர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஜாக் பிராஸர் மெகர்க் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 65 ரன்னில் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் அடுத்து களமிறங்கிய அபிஷேக் போரேல் 42 ரன்னிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர் இறுதியில் அணியானது 19.1 ஓவர்கள் முடிவில் 199 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து ஐதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் நடப்புத் தொடரில் ஐந்தாவது வெற்றியை பதிவு செய்த ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. டெல்லி அணி 7வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img