டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அதிரடி துவக்கம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 125  ரன்கள் குவித்துள்ளது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 34 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 35வது லீக் போட்டி நடைபெற்றது. டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 35வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 3 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திலுள்ளது. ஐதராபாத் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 4 வெற்றி 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் டெல்லி அணி 11 முறையும் ஐதராபாத் அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த போட்டியில் வெற்றி பெற்ற இரு அணிகளும் தங்களது வெற்றியை தொடர முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஐதராபாத் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட்டும் அபிஷேக் ஷர்மாவும் களமிறங்கினர். தற்போது வரை அணியானது 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 125ரன்கள் குவித்துள்ளது. டிராவிஸ் ஹெட் 84 ரன்னிலும் அபிஷேக் ஷர்மா 40 ரன்னிலும் களத்திலுள்ளனர்.

Video thumbnail
பனையூரில் விஜய் காரை மறித்து தவெகவினர் போராட்டம்.. காரை நிறுத்தாமல் சென்ற விஜய்!
00:54
Video thumbnail
தனது குருநாதர் கே.பாலசந்தருக்கு மரியாதை செலுத்திய நடிகர் சமுத்திரக்கனி
01:26
Video thumbnail
புத்தகம் என்பது அறிவாயுதம்... பயன்படுத்தாம விட்டா துரு பிடிச்சிரும்
00:47
Video thumbnail
தீரர்கள் கோட்டம் தி.மு.க. - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
01:30
Video thumbnail
"சீமானும், விஜயும் ஆர்.எஸ்.எஸ், பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்" - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
01:26
Video thumbnail
பாஜக சகுனிகளின் கூடாரம்
01:25
Video thumbnail
பொங்கலுக்குள் மாதவரம் ஏரியில் பொதுமக்களுக்கு படகு சவாரி - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
01:20
Video thumbnail
சாலையில் சென்ற பெண் மீது மோதிய ஆட்டோ | சிசிடிவி காட்சி
00:27
Video thumbnail
விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி
01:37
Video thumbnail
'அரசன்' திரைப்பட படப்பிடிப்புக்கு இடையே மதுரையில் ரசிகர் சந்திப்பு நடத்திய நடிகர் சிம்பு
00:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img