குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 8.5 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழந்து 92 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 31 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், நேற்று 32வது லீக் போட்டி நடைபெற்றது. அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 32வது லீக் போட்டியில் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து குஜராத் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விருத்திமான் சஹா 2 ரன்னிலும் சுப்மான் கில் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் 10 ரன்னிலும் டேவிட் மில்லர் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக ரஷித்கான் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 17.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. டெல்லி அணி தரப்பில் பந்துவீச்சில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் டெல்லி அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா 7 ரன்னிலும் ஜாக் பிராஸர் மெகர்க்கும் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அபிஷேக் போரேல் 15 ரன்னிலும் சாய் ஹோப் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 92 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. அணியின் ஆட்டநாயகன் விருது ரிஷப் பண்டுக்கு வழங்கப்பட்டது.