spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

முகேஷ் குமாரின் வேகத்தில் சுருண்டது…..குஜராத் அணி – டெல்லி அணிக்கு 90 ரன்கள் இலக்கு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி முதலாவது பேட்டிங்கில் 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 31 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 32வது லீக் போட்டி நடைபெற்றது. அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 32வது லீக் போட்டியில் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து குஜராத் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விருத்திமான் சஹா 2 ரன்னிலும் சுப்மான் கில் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் 10 ரன்னிலும் டேவிட் மில்லர் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக ரஷித்கான் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 17.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. டெல்லி அணி தரப்பில் பந்துவீச்சில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் டெல்லி அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும் ஜாக் பிராஸர் மெகர்க்கும் களமிறங்கவுள்ளனர்.

Video thumbnail
மோடியை எச்சரித்த ஸ்டாலின் | பாஜக அரசின் மிக மோசமான திட்டம் | MKStalin | Modi | DMK | BJP
10:30
Video thumbnail
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதி நிலவரம் | விஜய்யின் செல்வாக்கு மொத்தமாக முடிந்தது | TVK | Vijay
18:38
Video thumbnail
மதுரவாயல் திமுக வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு..
01:47
Video thumbnail
"உங்களுக்காக இந்த இடத்தை உருவாக்கி தருவேன்" - அமைச்சர் நாசர் வாக்குறுதி
01:13
Video thumbnail
"81 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா.." - அமைச்சர் நாசர்..
00:39
Video thumbnail
"தமிழக முதல்வரே நேரடியாக வந்து ஆய்வு செய்து.." - அமைச்சர் நாசர்..
00:51
Video thumbnail
மாஃபா பாண்டியராஜன் செய்த துரோகம்..
01:51
Video thumbnail
ஆவடியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
01:21
Video thumbnail
தவெக ஆட்சியில் வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும்..- தவெக தலைவர் விஜய்..
01:19
Video thumbnail
தவெக ஆட்சியில் வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும்.. - தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்
12:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img