குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 31 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 32வது லீக் போட்டி நடைபெறுகிறது. அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 32வது லீக் போட்டியில் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. குஜராத் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 3 வெற்றி 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திலுள்ளது. டெல்லி அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 2 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திலுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் குஜராத் அணி 2 முறையும் டெல்லி அணி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவில்லாமல் போனது. இப்போட்டியில் வெற்றி பெற இவ்விரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து குஜராத் அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹாவும் சுப்மான் கில்லும் களமிறங்கவுள்ளனர்.