spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது குஜராத் அணி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 199 ரன்கள் குவித்துள்ளது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெற்ற 17வது ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்சும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஷிகர் தவான் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. குஜராத் அணியை பொறுத்தவரை தனது தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தியது, இரண்டாவது ஆட்டத்தில் சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்தது. 3 ஆட்டத்தில் குஜராத் அணி ஐதராபாத் அணியை வீழ்த்தியது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. அடுத்த இரு ஆட்டத்திலும் பெங்களூர் மற்றும் லக்னோ அணியிடம் தோல்வியை தழுவியது. இவ்விரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் குஜராத் அணி 2 முறையும் பஞ்சாப் அணி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து குஜராத் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விருத்திமான் சஹா 11 ரன்னில் ஆட்டமிழக்க சுப்மான் கில் 89 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் 26 ரன்னிலும் சாய் சுதர்சன் 33 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடி காட்டிய ராகுல் திவேதியா 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். அணியின் அதிகபட்சமாக சுப்மான் கில் 89 ரன்கள் குவித்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 199 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடவுள்ளது.

 

Video thumbnail
விவாகரத்து கிடைக்கும் வரை படம் நடிக்க மாட்டேன் - சென்னையில் நடிகர் ரவிமோகன் பேட்டி
01:45
Video thumbnail
‘போதையில்லா தமிழகத்தை உருவாக்க’ - நிர்மல் குமார் பேட்டி
01:32
Video thumbnail
மனைவியின் மேல்சிகிச்சைக்கு உதவுமாறு நடிகர் முத்துகாளை முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை
01:11
Video thumbnail
திமுக தோல்விக்கு காரணம்? #MKStalin #DMK #Election2026
01:34
Video thumbnail
மு.க.ஸ்டாலின் தோல்வியை மக்கள் விரும்பவில்லை..
00:53
Video thumbnail
தீவிர ஆலோசனையில் மு.க.ஸ்டாலின் | நடக்கப்போகும் அதிரடி மாற்றம் | அச்சத்தில் மாவட்டச் செயலாளர்கள் |DMK
18:32
Video thumbnail
முதல்வர் விஜயை சந்தித்த CII நிர்வாகிகள்..! #CMVijay #JosephVijay #TamilNadu #CII #Investment
00:28
Video thumbnail
வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு.. CCTV காட்சி வெளியீடு!
00:33
Video thumbnail
அம்பத்தூரில் நிரந்தர பணி கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்..
02:26
Video thumbnail
"எங்க ஆபீஸ்க்கு ஏற்கெனவே ஆர்டர் பண்ண ஷோபா தான் வந்தது"
02:13
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img