spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

வெற்றி பாதைக்கு திரும்புமா பஞ்சாப் – குஜராத் அணியுடன் இன்று மோதல்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

17வது ஐபிஎல் சீசனில் இன்று நடைபெறும் 17வது லீக் போட்டியில் குஜராத்vsபஞ்சாப் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 16 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 17வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் கொல்கத்தா அணி 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னை அணி இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. லக்னோ அணி இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள 17வது ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்சும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. குஜராத் அணியை பொறுத்தவரை தனது தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தியது, இரண்டாவது ஆட்டத்தில் சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்தது. 3வது ஆட்டத்தில் குஜராத் அணி ஐதராபாத் அணியை வீழ்த்தியது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. அடுத்த இரு ஆட்டத்திலும் பெங்களூர் மற்றும் லக்னோ அணியிடம் தோல்வியை தழுவியது. இவ்விரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் குஜராத் அணி 2 முறையும் பஞ்சாப் அணி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img