spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

குஜராத் அணியை தெறிக்கவிட்ட பெங்களூரு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 16 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டுகள் இழந்து 206 ரன்கள் குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 44 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், இன்று 45வது லீக் போட்டி நடைபெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 45வது லீக் போட்டியில் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ பிளசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து குஜராத் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விருத்திமான் சஹா 5 ரன்னிலும் சுப்மான் கில் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்ஷன் 84 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய சாருக்கான் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 200 ரன்கள் எடுத்தது.

பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பாப் டூ பிளசிஸ் 24 ரன்னில் ஆட்டமிழக்க மறுபுறம் களமிறங்கிய விராட் கோலி 70 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய வில் ஜாக்ஸ் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 100 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இறுதியில் அணியானது 16 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டுகள் இழந்து 206 ரன்கள் குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் ஆட்டநாயகன் விருது சதம் விளாசிய வில் ஜாக்ஸ்க்கு வழங்கப்பட்டது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img