spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 44 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், இன்று 45வது லீக் போட்டி நடைபெறுகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 45வது போட்டியில் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. குஜராத் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 4 வெற்றி 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 7வது முதலாவது இடத்திலுள்ளது. பெங்களூரு அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 2 வெற்றி 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி (10வது) இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் குஜராத் அணி 2 முறையும் பெங்களூர் அணி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. குஜராத் அணியானது கடைசியாக மோதிய (டெல்லி அணிக்கு) ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளதால் இப்போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும். அதே சமயம் பெங்களூரு அணி தங்களது வெற்றியை தொடர முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்பு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ பிளசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து குஜராத் அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹாவும் சுப்மான் கில்லும் களமிறங்கவுள்ளனர்.

Video thumbnail
இந்தியா கூட்டணியில் தவெக இடம்பெறுமா? | TVK | CM Vijay | INDIA Alliance | RahulGandhi | Congress
09:46
Video thumbnail
வாத்தி படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து பாரதிராஜாவுக்கு கென் கருணாஸ் அஞ்சலி..
00:49
Video thumbnail
அம்பத்தூர் டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு ₹10 கூடுதல் வசூல்?
00:38
Video thumbnail
முதல் மரியாதை-யெல்லாம் உலக சினிமா.. அந்த மாதிரியான படங்கள் இப்போது வரவில்லை - இயக்குநர் ஷங்கர்..
01:04
Video thumbnail
திரையுலகத்தை வாழ வைத்தவர் பாரதிராஜா.. இயக்குநர் பாரதிராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி
01:17
Video thumbnail
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு தமிழக முதல்வர் விஜய் வருகை..
01:06
Video thumbnail
நண்பரும், இயக்குநருமான பாரதிராஜா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இசைஞானி இளையராஜா!
00:55
Video thumbnail
பாரதிராஜாவின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
01:05
Video thumbnail
இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு நடிகர்கள் சூர்யா, சிவகுமார் நேரில் அஞ்சலி
00:15
Video thumbnail
இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்
00:15
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img