spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

லக்னோ அணியை பந்தாடியது கொல்கத்தா!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 52 லீக் போட்டிகள் நடந்துள்ளன. நேற்று 54வது லீக் போட்டி (அதாவது இரண்டாவது போட்டி) நடைபெற்றது. லக்னோவில் உள்ள மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 54வது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பில் சால்ட் 32 ரன்களிலும் சுனில் நரேன் 81 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி 32 ரன்களிலும் ஆந்தரே ரஸ்செல் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடி காட்டிய ரமன்தீப் சிங் 6 பந்துகளில் 25 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 235 ரன்கள் குவித்தது.

பின்னர் 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் லக்னோ அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் 25 ரன்களிலும் அர்ஷின் குல்கர்னி 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 36 ரன்களிலும் தீபக் கூடா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் பந்துவீச்சு தரப்பில் ஹர்சித் ராணா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அணியின் சுனில் நரேன் தேர்வு செய்யப்பட்டார்.

 

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img