நடப்பு தொடரில் இரண்டாவது சதத்தை விளாசிய ஜாஸ் பட்லர்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜாஸ் பட்லர் நடப்பு தொடரில் இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 30 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், நேற்று 31வது லீக் போட்டி நடைபெற்றது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 31வது லீக் போட்டியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணி முதலாவது விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பில் சால்ட் 10 ரன்னிலும் சுனில் நரேன் அபாரமாக விளையாடி சதம் விளாசி 109 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரகுவன்ஷி 30 ரன்னிலும் ஸ்ரேயர்ஸ் அய்யர் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அணியை 200 ரன்கள் கடக்க வைத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 223 ரன்கள் குவித்துள்ளது.

பின்னர் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜாஸ் பட்லர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி அணி வெற்றி பாதைக்கு திருப்பிய அவர் 17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். அவர் 60 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். ஏற்கனவே நடப்பு தொடரில் நடந்த 19வது லீக் போட்டியில் பெங்களூருக்கு அணிக்கு எதிராக பட்லர் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img