ஐ.பி.எல். லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தியது.
பழனி முருகன் கோயிலில் களைக்கட்டியுள்ள பங்குனி உத்திர திருவிழா!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சைத் தேர்வுச் செய்தது. இதையடுத்து, களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரசல் 64 ரன்களையும், சால் 54 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான அகர்வால் மற்றும் அபிஷேக் சர்மா 32 ரன்களில் அவுட் ஆகினர். அடுத்து வந்த திரிபாதி 20 ரன்களிலும், ஏய்டன் மார்கம் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, அதிரடியாக ஆடிய கிளாசன் அரைசதம் விளாசினார். 63 ரன்களை குவித்த கிளாசன் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
காய்கறி வாங்கி ஆதரவுத் திரட்டிய நடிகர் மன்சூர் அலிகான்!
வெற்றி பெற கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹைதராபாத் அணி ரன் எதுவும் எடுக்கவில்லை. இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்களை மட்டுமே எடுத்து போராடி தோல்வி அடைந்தது.
இதன் மூலம் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.