பெங்களூரு அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

“குடிமராமத்துப் பணிகளை செய்தது அ.தி.மு.க.”- எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

பெங்களூருவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது. பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 83 ரன்களையும், கேம்ரான் க்ரீன் 33 ரன்களையும், மேக்ஸ்வெல் 28 ரன்களையும் எடுத்தனர்.

“பா.ஜ.க.வுடன் ராமதாஸ் கூட்டணி வைத்தது ஏன்?”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16.5 ஓவரில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 186 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களையும், சுனில் நரின் 47 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 39 ரன்களையும் எடுத்தனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று (மார்ச் 30) இரவு 07.30 மணிக்கு லக்னோவில் நடைபெறவுள்ளது.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img