spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் : சென்னை அணியை வீழ்த்தியது லக்னோ அணி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

17வது ஐபிஎல் கிர்க்கெட் சீசனில் நேற்றிரவு நடைபெற்ற 34வது லீக் போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய லக்னோ அணி தனது நான்காவது வெற்றியை பதிவு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 33 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், நேற்று 34வது லீக் போட்டி நடைபெற்றது. லக்னோ மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 34வது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னை அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா சந்திந்த முதல் பந்திலேயே போல்டாகி வெளியேற அஜிங்கியா ரஹானே 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் 17 ரன்னில் ஆட்டமிழக்க ரவீந்திர ஜடேஜா 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் அதிரடி காட்டிய மகேந்திர சிங் தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அணியை 176 ரன்கள் கடக்க வைத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்கள் எடுத்தது.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குயிண்டன் டிகாக் 53 ரன்னிலும் கேஎல் ராகுல் ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய நிகோலஸ் பூரன் 23 ரன்னிலும் மார்கஸ் ஸ்டோனிஸ் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் அணியானது 19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழந்து 180 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது 83 ரன்கள் குவித்த கேஎல் ராகுலுக்கு வழங்கப்பட்டது.

Video thumbnail
தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் விஜய்க்கு அணிவகுப்பு மரியாதை
01:32
Video thumbnail
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன் முதலாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்..
00:17
Video thumbnail
பழனி முருகன் கோயிலில் நடிகர் ரவி மோகன் சாமி தரிசனம்
01:19
Video thumbnail
மாமூல் கேட்டு மிரட்டியதாக குற்றச்சாட்டு.. தவெக நிர்வாகிக்கு எதிராக போராட்டம்
01:50
Video thumbnail
இரவு நேரங்களில் லோடு வேனில் மாடு திருடும் CCTV காட்சிகள் வெளியீடு
02:08
Video thumbnail
சரிய தொடங்கியது விசிக செல்வாக்கு
02:09
Video thumbnail
தவெக அமைச்சரவையில் விசிக..
01:33
Video thumbnail
விவசாய கடன் தள்ளுபடி முதல்வர் முடிவெடுப்பார்..- வேளாண்துறை அமைச்சர் வினோத் பேட்டி
01:01
Video thumbnail
கருப்பு படத்தின் வெற்றி | நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூர்யா | Karuppu | Suriya
04:53
Video thumbnail
தவெக அமைச்சரவையில் விசிக | இது சரியான பாதையா? | TVK | CM Vijay | VCK | Thirumavalavan
11:31
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img