spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 33 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 34வது லீக் போட்டி நடைபெறுகிறது. லக்னோ மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 34வது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோ அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 3 வெற்றி 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலுள்ளது. சென்னை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 4 வெற்றி 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 1 முறையும் லக்னோ அணி 1முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது. கடந்த போட்டியில் (கொல்கத்தாவுக்கு எதிராக) தோல்வியடைந்த லக்னோ அணி இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும். அதே சமயம் சென்னை அணி தனது வெற்றியை தொடர முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னை அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்கியா ரஹானேவும் ரச்சின் ரவீந்திராவும் களமிறங்கவுள்ளனர்.

Video thumbnail
நீதிமன்ற வளாகத்தில் விவாகரத்து மனுவை கிழித்தெறிந்து, கணவருடன் சேர்த்த மனைவி
00:58
Video thumbnail
"தவெகவிற்கு ஆதரவளித்த கட்சிகள் மீது முதலமைச்சர் விஜய்-க்கு நம்பிக்கை இல்லையா?"
01:46
Video thumbnail
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சியில் இணையும் மாற்றுக் கட்சியினர்
02:40
Video thumbnail
தவெகவின் ஒருமாத கால ஆட்சி குறித்து வைகோ சொன்ன கருத்து
01:18
Video thumbnail
தமிழக அரசின் பட்ஜெட் நல்ல விதமாக இருக்கும்... நிதி அமைச்சர் மரிய வில்சன் பேட்டி..
01:30
Video thumbnail
தவெகவில் இணைவதற்கு பனையூர் தவெக அலுவலகம் வந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி
01:09
Video thumbnail
சென்னையில் இருந்து கோவை சென்ற அண்ணாமலைக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு..
00:57
Video thumbnail
சசிகுமார் அவரது படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன், பாரதிராஜா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்
00:38
Video thumbnail
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்
00:50
Video thumbnail
டெல்லியில் இருந்து விமானம் மூலம் மங்களூரு சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்
01:01
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img