லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 144 ரன்கள் எடுத்தது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 47 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 48வது லீக் போட்டி நடைபெற்றது. லக்னோவில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 48வது போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து மும்பை அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 4 ரன்களிலும் இஷான் கிஷான் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 10 ரன்களிலும் திலக் வர்மா 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக நெஹால் வதேரா 46 ரன்கள் எடுத்தார் மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 144 ரன்கள் எடுத்தது. பின்னர் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் லக்னோ அணி இரண்டாவது பேட்டிங் செய்யவுள்ளது.