spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 47 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 48வது லீக் போட்டி நடைபெறுகிறது. லக்னோவில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 48வது போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோ அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 5 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலுள்ளது. மும்பை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 3 வெற்றி 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் லக்னோ அணி 3 முறையும் மும்பை அணி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. நடப்புத் தொடரில் 9 போட்டிகள் விளையாடி 3 வெற்றி மற்றும் 6 போட்டிகளில் தோல்வியடைந்த மும்பை அணி இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திலுள்ளது. அதே சமயம் கடந்த போட்டியில் தோல்வியடைந்த லக்னோ அணி இப்போட்டியில் வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து மும்பை முதலாவது பேட்டிங் செய்யவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷானும் ரோகித் சர்மாவும் களமிறங்கவுள்ளனர்.

Video thumbnail
சென்னை வந்த ஜிம்பாப்வே வீரர்களுக்கு மலர் தூவி வரவேற்பு
00:53
Video thumbnail
குமரி மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
02:36
Video thumbnail
"ரெண்டே பேருக்குதான் போட்டியே..." - நடிகர் பிரபு தேவா வெளியிட்ட வீடியோ
00:45
Video thumbnail
ஜெயலலிதா 78வது பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்த எடப்பாடி பழனிசாமி
01:28
Video thumbnail
"முதல்வரை நான் நேரில் ஒரு முறை கூட பார்த்ததில்லை.." நடிகர் விஜய் ஆண்டனி பேச்சு
01:37
Video thumbnail
"50.. ஐம்பதாகவே இருக்கட்டும்.. 500 ஆக்கிராதீங்க" - பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட வீடியோ..
00:54
Video thumbnail
"எங்கள் ஓட்டு எங்கள் உரிமை, எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது"
00:59
Video thumbnail
அறிவாலயம் பக்கத்துல யாரு நிழலுக்கு ஒதுங்குனாலும்.. கூட்டணியில சேத்துக்கிறது.. கல்லாப்பெட்டி கூட்டணி
01:10
Video thumbnail
உறுதியா சொல்றேன்.. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு நம்ம ஆட்சியில் NO.1-ஆ இருக்கும்.. - தவெக விஜய்
01:12
Video thumbnail
விஜய்க்கும், ஸ்டாலின் சார்க்கும் நடக்கும் போர்தான் இந்த தேர்தல் | NDA, டெல்லி இல்லை | TVK விஜய்
28:34
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img