ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 54 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 55வது லீக் போட்டி நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 55வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 3 வெற்றி 8 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசியிடத்திலுள்ளது. ஐதராபாத் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 6 வெற்றி 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திலுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 12 முறையும் அணி ஐதராபாத் அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 8வது லீக் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக தோல்வியடைந்த மும்பை அணி தற்போது அதற்கு பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஐதராபாத் அணியானது தங்களது வெற்றியை தொடர முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஐதராபாத் அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட்டும் அபிஷேக் ஷர்மாவும் களமிறங்கவுள்ளனர்.