spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ரோகித் சர்மாவின் சதம் வீண் – மும்பை அணியை வீழ்த்தியது சென்னை அணி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 28 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், நேற்று 29வது லீக் போட்டி நடைபெற்றது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக சென்னை அணி முதலாவதாக பேட்டிங் செய்யவுள்ளது.

சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரஹானே 5 ரன்னிலும் ரச்சின் ரவீந்திரா 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் 69 ரன்னில் ஆட்டமிழக்க, சிவம் துபே 66 ரன்னில் ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியில் அதிரடி காட்டிய எம்எஸ் தோனி 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அணியை 200 ரன்கள் கடக்க வைத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 206 ரன்கள் குவித்தது.

பின்னர் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் 23 ரன்னில் ஆட்டமிழக்க ரோகித் சர்மா 105 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ரன் ஏதுமின்றியும் திலக் வர்மா 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 186 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சென்னை அணி தரப்பில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய மதிஷா பதிரனா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Video thumbnail
"ஆளுநரின் செயல் வருத்தமளிக்கிறது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேச்சு
01:35
Video thumbnail
தவெக தலைவர் விஜய்யிடம் 5.30 மணி நேரமாக நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு
00:48
Video thumbnail
ஆந்திரா: பெண் காவலர் ஜெயாவுக்கு குவியும் பாராட்டு
00:46
Video thumbnail
ஜான்சியில் சுங்கச்சாவடியில் நின்றிருந்த கார்களை வேகமாக வந்து முட்டித் தள்ளிய லாரி
00:31
Video thumbnail
மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
00:55
Video thumbnail
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜர்
00:30
Video thumbnail
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்
01:09
Video thumbnail
77 ஆவது குடியரசு தினத்தையொட்டி காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை
00:38
Video thumbnail
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தில் ரூ.2,500 உயர்த்தி மாதம் ரூ.15,000 வழங்கப்படும் -அன்பில் மகேஸ்
02:03
Video thumbnail
பொங்கலுக்கு எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன? - அமைச்சரின் பதில்கள்
02:09
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img