கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த மும்பை அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 50 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 51வது லீக் போட்டி நடைபெறுகிறது. மும்பைமைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் 51வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பில் சால்ட் 5 ரன்களிலும் சுனில் நரேன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக வெங்கடேஷ் அய்யர் 70 ரன்கள் எடுத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் பந்துவீச்சு தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 11 ரன்களிலும் இஷான் கிஷான் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 56 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பந்துவீச்சு தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை அள்ளினார். இந்த தோல்வியின் மும்பை அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. கொல்கத்தா அணியின் ஆட்டநாயகனாக வெங்கடேஷ் அய்யர் தேர்வு செய்யப்பட்டார்.