spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 52 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 53வது லீக் போட்டி நடைபெறுகிறது. இமாசலபிரதேசத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 53வது லீக் போட்டியில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பஞ்சாப் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 4 வெற்றி 6 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திலுள்ளது. சென்னை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 5 வெற்றி 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 15 முறையும் பஞ்சாப் அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த போட்டியில் சென்னை அணி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து ஏமாற்றமளித்தது. தற்போது அதற்கு பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் அணியும் தங்களது வெற்றியை தொடர முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னை அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்க்காரகளாக அஜிங்கியா ரஹானேவும் ருத்ராஜ் கெய்க்வாடும் களமிறங்கவுள்ளனர்.

Video thumbnail
கேரளம் சட்டமன்றத் தேர்தல் : வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் நடிகர் மோகன்லால்!
01:01
Video thumbnail
கேரளம் சட்டமன்றத்தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய நடிகர் மம்முட்டி
01:01
Video thumbnail
கண்ணூரில் கேரளம் முதல்வர் பினராயி விஜயன் தனது வாக்கைச் செலுத்தினார்
00:54
Video thumbnail
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க RX100 பைக்கில் வந்த முதலமைச்சர் ரங்கசாமி
00:52
Video thumbnail
உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம் தான் உள்ளது.. - நெல்லையில் தவெக தலைவர் விஜய் பரப்புரை | TVK Vijay
19:37
Video thumbnail
"டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள முயற்சி" - திருச்சி சிவா பரபரப்பு பேச்சு | Trichy Siva
16:53
Video thumbnail
"தமிழ்நாடு நிதியை புறக்கணிக்கும் பாஜகவை, தமிழ்நாடு புறக்கணிக்கும்" - உதயநிதி ஸ்டாலின் பரப்புரை
15:58
Video thumbnail
கலைஞர் கருணாநிதி சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்த முதல்வர் ஸ்டாலின்
00:35
Video thumbnail
தினமலர் - சாணக்யா கருத்து கணிப்பு பின்னணி
00:49
Video thumbnail
ஆந்திரா தேர்தல் : 52 லட்சம் வாக்குகள் பதிவு - பரகலா பிரபாகர்
01:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img