குஜராத் அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப் அணி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நேற்று நடைபெற்ற 17வது ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்சும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஷிகர் தவான் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. குஜராத் அணியை பொறுத்தவரை தனது தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தியது, இரண்டாவது ஆட்டத்தில் சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்தது. 3 ஆட்டத்தில் குஜராத் அணி ஐதராபாத் அணியை வீழ்த்தியது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. அடுத்த இரு ஆட்டத்திலும் பெங்களூர் மற்றும் லக்னோ அணியிடம் தோல்வியை தழுவியது. இவ்விரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் குஜராத் அணி 2 முறையும் பஞ்சாப் அணி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து குஜராத் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விருத்திமான் சஹா 11 ரன்னில் ஆட்டமிழக்க சுப்மான் கில் 89 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் 26 ரன்னிலும் சாய் சுதர்சன் 33 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடி காட்டிய ராகுல் திவேதியா 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். அணியின் அதிகபட்சமாக சுப்மான் கில் 89 ரன்கள் குவித்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 199 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் 1 ரன்னிலும் ஜானி பேர்ஸ்டோ 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 35 ரன்னிலும் சாம் கரன் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய சசாங் சிங் அணியை வெற்றிப்பாதைக்கு வித்திட்டார். அணியின் அதிகபட்சமாக சசாங் சிங் 61 ரன்கள் குவித்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணியின் ஆட்டநாயகனாக சசாங் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

 

Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாடு
00:50
Video thumbnail
இந்தியாவின் மிகப்பெரிய எதிரெதிரான அரசியல்
00:58
Video thumbnail
சுயமரியாதை என்றால் என்ன?
00:53
Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா | சுயமரியாதை என்றால் என்ன? | Kovai | Mugavari News
13:00
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது
00:48
Video thumbnail
சிந்து நதி நீர் ஒப்பந்தம் எப்போது நிறைவேற்றப்பட்டது
00:45
Video thumbnail
தண்ணீர் யுத்தம் | பாகிஸ்தான் பாலைவனமாக மாறிவிடும்
00:32
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு மொத்தமா FLOP | புறக்கணிக்கும் பல்கலை. துணைவேந்தர்கள் | ஆளுநர் ரவி | RN Ravi
10:08
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது | இந்தியா அதிரடி நடவடிக்கை | Indus River
08:28
Video thumbnail
இட ஒதுக்கீடுகாக அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றியவர் பெரியார்
00:52
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img