spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 32 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 33வது லீக் போட்டி நடைபெறுகிறது. முல்லாப்பூரில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 33வது லீக் போட்டியில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பஞ்சாப் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 2 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திலுள்ளது. மும்பை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 2 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 16 முறையும் பஞ்சாப் அணி 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இவ்விரு அணிகளும் கடைசியாக நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்துள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து மும்பை அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷானும் ரோகித் சர்மாவும் களமிறங்கவுள்ளனர்.

Video thumbnail
ஆவடி ரயில் நிலையம் அருகே துணி கடையில் பயங்கர தீ விபத்து. மின் இணைப்பு பெட்டி வெடித்ததால் தீ விபத்து
00:42
Video thumbnail
போதை பொருள் பயன்படுத்தினேனா? - அமைச்சர் சரத்குமார் விளக்கம்
01:25
Video thumbnail
அனைத்து பேருந்திலும் மகளிருக்கு இலவச பயணம் விரைவில் அறிவிக்கப்படும்.. - விஜய் தமிழன் பார்த்திபன்
00:54
Video thumbnail
பெருந்தலைவர் காமராஜரை பற்றி சுப. வீரபாண்டியன்..
01:12
Video thumbnail
ரீல்ஸ் மோகத்தில் விஜய் | ஆதரிக்கும் தலைவர்கள், தவெகவினர் | Reels | CM Vijay | TVK | TN Political
18:59
Video thumbnail
முரசொலியில் பெ.சண்முகம் குறித்து எழுதப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.. - அமைச்சர் ராஜ்மோகன்
01:28
Video thumbnail
"Sports-ஐ எடு... Drugs-ஐ விடு..." என எழுதி கையெழுத்திட்ட முதலமைச்சர் விஜய்
01:16
Video thumbnail
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம்: முதல்வர் விஜயுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பெண்கள்
00:18
Video thumbnail
சட்டப்பேரவையில் முதல்வர் சொன்ன குட்டிக்கதை..- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்
00:46
Video thumbnail
"அப்பாவை அங்க தேடாதீங்க" முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி
01:12
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img