பெங்களூரு அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது லக்னோ அணி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நேற்றிரவு நடைபெற்ற 15வது ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. பெங்களூரு அணியை பொறுத்தவரை இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் இரண்டு தோல்வி ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. லக்னோ அணியை பொறுத்தவரை இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 4 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பெங்களூர் அணி 3 முறையும் லக்னோ அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ பிளசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து லக்னோ அணி முதலாவது பேட்டிங் செய்யவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் 20 ரன்னிலும் குயின்டன் டிகாக் 81 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 24 ரன்னிலும் நிக்கோலஸ் பூரன் 40 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 181 ரன்கள் எடுத்தது. பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி 22 ரன்னிலும் பாப் டூ பிளசிஸ் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரஜத் படிதார் 29 ரன்னிலும் மேக்ஸ்வேல் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக மகிபால் லாம்ரார் 33 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களூக்குள் ஆல் அவுட் ஆனது. பின்னர் 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது . ஆட்டநாயகன் விருது லக்னோ வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ்க்கு வழங்கப்பட்டது.

Video thumbnail
எடப்பாடியாரைப் போன்று விஜய்யும் பாஜக வலையில் சிக்கிக்கொண்டார்
01:08
Video thumbnail
தவெக-வை தொடங்க சொன்னதே பிஜேபி தான்
01:08
Video thumbnail
கரூர் பிரச்சாரத்தை சினிமா பணியில் பார்க்கும் தவெக தொண்டர்கள்
01:08
Video thumbnail
கரூர் பிரச்சாரத்தை சினிமா பணியில் பார்க்கும் தவெக தொண்டர்கள் |சமூக வலைதளங்களில் கொண்டாடும் தவெகவினர்
12:24
Video thumbnail
கரூர் வழக்கு சிபிஐ விசாரிக்க உத்தரவு -உச்ச நீதிமன்றம்
01:06
Video thumbnail
கரூர் வழக்கு சிபிஐ விசாரிக்க உத்தரவு -உச்ச நீதிமன்றம் | எடப்பாடியாரைப் போன்று விஜய்யும் பாஜக வலையில்
11:55
Video thumbnail
ஜெயலலிதாவுக்கு நடந்ததுதான் விஜய்க்கும் நடக்கும்
01:01
Video thumbnail
ஜெயலலிதாவுக்கு நடந்ததுதான் விஜய்க்கும் நடக்கும் | திமுகவைப் பற்றி குறைத்து மதிப்பிடுகிறார்கள் | DMK
04:57
Video thumbnail
பாஜக அதிமுக கூட்டணிக்கும், தவெகவிற்கும் தான் கடுமையான போட்டி
01:09
Video thumbnail
"வாங்க கற்றுக் கொள்வோம்" | தீ விபத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு | லோகநாதன் பேட்டி
04:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img