spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஐபிஎல் கிரிக்கெட்  தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 30வது லீக் போட்டி நடைபெறுகிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள 30வது லீக் போட்டியில் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூரு அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 6 போட்டியில் 1 வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3 வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஐதராபாத் அணி 12 முறையும் பெங்களூரு அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்தத பெங்களூரு அணி இந்த போட்டியில் வெற்றியை பெற கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ பிளசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஐதராபாத் அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட்டும் அபிஷேக் ஷர்மாவும் களமிறங்கவுள்ளனர்.

 

Video thumbnail
“விஜய் மாடல் அரசு.. அமைதிப் புரட்சி..” சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்
01:27
Video thumbnail
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் தவெகவினர் | விஜய் ஏன் இதுவரை கண்டிக்கவில்லை? | Vijay | TVK
09:57
Video thumbnail
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் திடீரென வீசிய புழுதிப் புயலால் புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
01:08
Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
Video thumbnail
இப்போதும் தமிழ்நாட்டை ஆள்பவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
01:48
Video thumbnail
அம்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீர் மின் தடை
01:11
Video thumbnail
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்த அன்புமணி, சௌமியா அன்புமணி..!
00:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img