spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மும்பை அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது ராஜஸ்தான் அணி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 13 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், நேற்று 14வது லீக் போட்டி நடைபெற்றது.  இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் கொல்கத்தா அணி 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சென்னை அணி இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி இரண்டு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு நடைபெறவுள்ள ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.  மும்பை அணி இதுவரை ஒரு வெற்றி கூட பெறவில்லை. இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலுமே தோல்வி அடைந்துள்ள மும்பை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்ய முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து மும்பை முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் 16 ரன்னிலும் ரோகித் சர்மா ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய நம் தீர் ரன் ஏதுமின்றியும், டிவால்ட் பிரவிஸ் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 34 ரன்கள் எடுத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 125 ரன்கள் எடுத்தது. பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யாஷ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்னிலும் ஜாஸ் பட்லர் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 12 ரன்னில் வெளியேறினார். அணியின் அதிகபட்சமாக ரியான் பராக் 54 ரன்கள் எடுத்தார். இறுதியில் அணியானது 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது டிரன்ட போல்டுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி  3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img