spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 55 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 56வது லீக் போட்டி நடைபெறுகிறது. டெல்லி உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 56வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 5 வெற்றி 6 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திலுள்ளது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 8 வெற்றி 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் டெல்லி அணி 13 முறையும் அணி ராஜஸ்தான் அணி 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 9வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக போட்டியில் தோல்வியடைந்த டெல்லி அணி தற்போது அதற்கு பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ராஜஸ்தான் அணியானது தங்களது வெற்றியை பெற்று லீக் சுற்றில் முதல் அணியாக தகுதி பெற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து டெல்லி அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் பிராஸர் மெகர்க்கும் அபிஷேக் போரேலும் களமிறங்கவுள்ளனர்.

Video thumbnail
"அமைச்சராக நீடிக்க தகுதி இல்லாத நபர் நிர்மல் குமார்"- பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
00:27
Video thumbnail
டெல்லியில் திடீரென வீசிய புழுதிக் காற்றால் வாகன ஓட்டிகள் அவதி
00:23
Video thumbnail
"பார்ட்டி ஃபண்ட் என்றுதான் சொன்னார்; எந்த பார்ட்டி ஃபண்ட் என்று சொன்னாரா?" - ஆதவ் அர்ஜுனா
01:47
Video thumbnail
சட்டமன்றத்தை சினிமா தியேட்டராக மாற்றிவிட்டார்கள் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
01:51
Video thumbnail
தான் முதல்வர் என்பதையே மறந்த விஜய் | இன்னும் தேர்தல் பிரசார பாணியில் பேச்சு | CM Vijay | TVK | DMK
12:35
Video thumbnail
பட்டியலின சகோதரர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததன் மூலம் அம்பேத்கர் கனவு நிறைவேறியுள்ளது..
02:24
Video thumbnail
"ஆமாங்க.. தெரியாது தான்.." எங்களுக்கு ஊழல் பண்ண தெரியாது, மக்கள் பணத்தை சுரண்ட தெரியாது..- முதல்வர்
02:35
Video thumbnail
திமுக ஆட்சியின் 25 முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு சென்றதால் 2.3 லட்சம் வேலைவாய்ப்புகள் இழப்பு..
02:36
Video thumbnail
ஆளுநர் உரையில் சமூகநீதி கணக்காய்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது மகிழ்ச்சி
01:36
Video thumbnail
தண்ணீர் பாட்டில் விவாதம்.. OPS சொன்ன வார்த்தை.. சிரிப்பில் குலுங்கிய பேரவை..
02:27
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img