குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 11 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், ஞாயிற்று கிழமையான இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் பலப்பரீட்சை நடத்துகின்றன. குஜராத் அணியை பொறுத்தவரையில், முதல் போட்டியில் மும்பை அணியுடன் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் சென்னை அணியுடன் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணியை பொறுத்தவரையில், இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் காரணமாக குஜராத் அணி முதலாவதாக பந்துவீசவுள்ளது. கடந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக முதலாவது பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 277 ரன்கள் குவித்து புதிய வரலாற்றை படைத்தது இந்நேரத்தில் குறிப்பிடதக்கது.