spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 17 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 18வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் கொல்கத்தா அணி 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னை அணி இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. லக்னோ அணி இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள 18வது ஐபிஎல் லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் பட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐதராபாத் அணியை பொறுத்தவரை தனது தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் வீழ்ந்தது. இரண்டாவது ஆட்டத்தில் மும்பை அணியை அதிரடியாக வீழ்த்தியது 3வது ஆட்டத்தில் குஜராத் அணியிடம் தோல்வியை தழுவியது. சென்னை அணியை பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது. 3வது ஆட்டத்தில் டெல்லி அணியிடம் தோல்வியை தழுவியது. இவ்விரு அணிகளும் இதுவரை 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 14 முறையும் ஐதராபாத் அணி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன

இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னை அணி முதலாவது பேட்டிங் விளையாட உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாடும் ரச்சின் ரவிந்திராவும் களமிறங்கவுள்ளனர்.

 

 

 

 

 

Video thumbnail
தியாகராய நகரில் பேசாமல் பிரச்சாரம் முடித்த விஜய்.. தவெக தொண்டர்கள் விஜயை பார்ப்பதற்காக ஓடி வந்தனர்
00:47
Video thumbnail
விஜய் பிரச்சார வாகன முன், இரு கைகள் விடுத்து ஆபத்தாக பைக் ஓட்டிய தவெக தொண்டர்.
00:56
Video thumbnail
மோடியை எச்சரித்த ஸ்டாலின் | பாஜக அரசின் மிக மோசமான திட்டம் | MKStalin | Modi | DMK | BJP
10:30
Video thumbnail
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதி நிலவரம் | விஜய்யின் செல்வாக்கு மொத்தமாக முடிந்தது | TVK | Vijay
18:38
Video thumbnail
மதுரவாயல் திமுக வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு..
01:47
Video thumbnail
"உங்களுக்காக இந்த இடத்தை உருவாக்கி தருவேன்" - அமைச்சர் நாசர் வாக்குறுதி
01:13
Video thumbnail
"81 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா.." - அமைச்சர் நாசர்..
00:39
Video thumbnail
"தமிழக முதல்வரே நேரடியாக வந்து ஆய்வு செய்து.." - அமைச்சர் நாசர்..
00:51
Video thumbnail
மாஃபா பாண்டியராஜன் செய்த துரோகம்..
01:51
Video thumbnail
ஆவடியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
01:21
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img