spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று பேட்டிங்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 40 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், இன்று 41வது லீக் போட்டி நடைபெறுகிறது. ஐதரபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 41வது லீக் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐதராபாத் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5 வெற்றி 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது முதலாவது இடத்திலுள்ளது. பெங்களூரு அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 1 வெற்றி 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஐதராபாத் அணி 13 முறையும் பெங்களூரு அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. நடப்புத் தொடரில் கடந்த 30வது லீக் போட்டியில் இரு அணிகளிலும் மோதிய ஆட்டத்தில் ஐதாராபாத் அணி 287 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. குறிப்பிடத்தக்கது. தற்போது பெங்களூரு அணி அதற்கு பதிலடி கொடுக்குமா என ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ பிளசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஐதராபாத் அணி பந்துவீசவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக பாப் டூ பிளசிஸ்சும் விராட் கோலியும் களமிறங்கவுள்ளனர்.

Video thumbnail
சென்னை தரமணி- வேளச்சேரி ரோடு மடிப்பாக்கத்தில் சென்னை குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து
01:48
Video thumbnail
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் சந்திப்பு
00:43
Video thumbnail
கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு
01:44
Video thumbnail
கலைஞர் எனும் மானமுள்ள சுயமரியாதைக்காரர் | சரித்தரத்திற்கு சொந்தக்காரர் | Kalaignar Karunanidhi
18:55
Video thumbnail
விஜய் புலி அல்ல - பூனை குட்டி | விஜய்யால் ஒன்றிய அரசை எதிர்க்க முடியாது | Vijay | CM | PM | Modi
16:25
Video thumbnail
100% நான் எந்த இடைத்தேர்தலிலும் நிற்கப் போவதில்லை - திருமாவளவன்
02:07
Video thumbnail
தேர்தலுக்குப் பிறகு தி.மு.க கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை.. சிதறிவிட்டதாக, திருமாவளவன் பேச்சு
02:10
Video thumbnail
திருவள்ளூர் மாவட்டத்தின் 25வது ஆட்சியராக ச. கவிதா பொறுப்பேற்றுக் கொண்டார்.
02:36
Video thumbnail
6 மாதம் அமைதியாக இருப்போம் என்றவர்கள் ஆறு நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை
01:25
Video thumbnail
திருச்சிக்கு முதல்வர் ஜோசப் விஜய் வருகை.. பேருந்து வழித்தடம் மாற்றம்.. நடந்து செல்லும் பொது மக்கள்..
01:14
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img