spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி திரில் வெற்றி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 49 லீக் போட்டிகள் நடந்துள்ளன. நேற்று 50வது லீக் போட்டி நடைபெற்றது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 50வது போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணி பந்துவீசியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 12 ரன்களிலும் டிராவிஸ் ஹெட் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அன்மோல்பிரித் சிங் 5 ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் எதிர்த்து ஆடிய நிதிஷ்குமார் ரெட்டி 72 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியில் அதிரடி காட்டிய ஹென்ரிச் கிளாசன் 19 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அணியை 200 ரன்கள் கடக்க வைத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 201 ரன்கள் குவித்தது.

பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜாஸ் பட்லர் ரன் ஏதுமின்றியும் யாஷ்வி ஜெய்ஸ்வால் 67 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து களமிறங்கிய ரியான் பராக் அதிரடியாக விளையாடி 77 ரன்களிலும் சிம்ரன் ஹெட்மயர் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆட்டத்தின் இறுதி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது புவனேஷ்வர் குமார் அபாரமாக பந்துவீசி ரோமன் பவல் விக்கெட்டை வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து ஐதரபாத் அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 200 ரன்கள் ரன்கள் எடுத்து 1 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஐதராபாத் அணியின் ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகள் வீழ்த்திய புவனேஷ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img