spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 49 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 50வது லீக் போட்டி நடைபெறுகிறது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 50வது போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐதராபாத் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 5 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலுள்ளது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 8 வெற்றி 1 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 18 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஐதரபாத் அணி 9 முறையும் ராஜஸ்தான் அணி 9 என சரிசமமாக வெற்றி பெற்றுள்ளன. கடந்த இரு போட்டிகளிலும் தோல்வியடைந்த ஐதராபாத் அணி இப்போட்டியில் எழுச்சி பெற முயற்சிக்கும். அதே சமயம் ராஜஸ்தான் அணி தங்களது வெற்றியை தொடர முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணி பந்துவீசவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட்டும் அபிஷேக் ஷர்மாவும் களமிறங்கவுள்ளனர்.

Video thumbnail
"ஆளுநரின் செயல் வருத்தமளிக்கிறது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேச்சு
01:35
Video thumbnail
தவெக தலைவர் விஜய்யிடம் 5.30 மணி நேரமாக நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு
00:48
Video thumbnail
ஆந்திரா: பெண் காவலர் ஜெயாவுக்கு குவியும் பாராட்டு
00:46
Video thumbnail
ஜான்சியில் சுங்கச்சாவடியில் நின்றிருந்த கார்களை வேகமாக வந்து முட்டித் தள்ளிய லாரி
00:31
Video thumbnail
மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
00:55
Video thumbnail
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜர்
00:30
Video thumbnail
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்
01:09
Video thumbnail
77 ஆவது குடியரசு தினத்தையொட்டி காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை
00:38
Video thumbnail
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தில் ரூ.2,500 உயர்த்தி மாதம் ரூ.15,000 வழங்கப்படும் -அன்பில் மகேஸ்
02:03
Video thumbnail
பொங்கலுக்கு எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன? - அமைச்சரின் பதில்கள்
02:09
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img