spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சண்டே ஸ்பெஷல்! இன்று இரண்டு ஐபிஎல் போட்டிகள்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 11 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், ஞாயிற்று கிழமையான இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் பலப்பரீட்சை நடத்துகின்றனர். குஜராத் அணியை பொறுத்தவரையில், முதல் போட்டியில் மும்பை அணியுடன் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் சென்னை அணியுடன் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணியை பொறுத்தவரையில், இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

இதேபோல் இன்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. டெல்லி அணி இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.

 

Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
Video thumbnail
கண்ணீரோடு இரங்கல்.. வீடியோ வெளியிட்ட கலா மாஸ்டர்
02:22
Video thumbnail
ஆவடி ரயில் நிலையம் அருகே துணி கடையில் பயங்கர தீ விபத்து. மின் இணைப்பு பெட்டி வெடித்ததால் தீ விபத்து
00:42
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img