spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

உச்சநீதிமன்றம் கண்டனம் – சந்திரபாபு நாயுடுவுக்கு திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தில் .

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது திருப்பதி லட்டு விவகாரத்தில்.

திருப்பதி கோயில் லட்டில் பயன்படுத்திய நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாகவும், இந்துக்களின் உணர்வுகளை ஜெகன் மோகன் தலைமையிலான அரசு புண்படுத்திவிட்டதாகவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளாா்.

இது குறித்து முறையான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு எதிராக ஒய்எஸ்எஸ்ஆர் காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மைத்தன்மையை ஆராயந்து ,விலங்கின் கொழுப்பைக் கலந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் எழுந்தது.

ஆவடி மாநகராட்சி ஜனவரி 2025 முதல் விரிவுபடுத்தப்படும்

இந்த குற்றச்சாட்டை ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மறுத்தார். மேலும் திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது கோரிக்கைகளுடன் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் அளித்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது நீதிபதி பி. ஆர். கவாய் தலைமையிலான அமர்வு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளது. முதல்வர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள், ஏன் இந்த விவகாரத்தை நேரடியாக ஊடகங்களிடம் எடுத்துச் சென்றீர்கள்? சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ஆந்திர முதல்வர், முடிவு வருவதற்கு முன்பே பொதுவெளியில் பேசியது ஏன்? சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ஆந்திர முதல்வர், முடிவு வருவதற்கு முன்பே பொதுவெளியில் பேசியது ஏன்? சர்ச்சைக்குரிய நெய்தான் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?. பொது வெளியில் பேசுவதற்கு முன்பு என்ன கலப்படம் என்பது உறுதிசெய்திருக்க வேண்டும்.

 

உச்சநீதிமன்றம் கண்டனம் சந்திரபாபு நாயுடுவுக்கு திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தில்

அரசியல் அமைப்பு சட்டப்படியான பதவியில் உள்ள முதலமைச்சர் கடவுளை வைத்து அரசியல் செய்யக்கூடாது. எத்தனை ஒப்பந்ததாரர்கள் நெய் விற்பனை செய்தனர்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருந்ததா?.கலப்படம் செய்யப்பட்டதாக கூறப்படும் நெய், திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்டது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. அதில், திருப்பதி லட்டு கலப்படம் குறித்து கடந்த ஜூலை மாதம் ஆய்வு செய்து அதன் அறிக்கையை டிசம்பர் மாதம் வெளியிட்டதன் காரணம் என்ன? நீங்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெளிவானதாக இல்லை. ஆய்வு மாதிரியில் பயன்படுத்தப்பட்ட நெய்தான் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என இதில் குறிப்பிடப்படவில்லை.

மேலும் அரசியலில் இருந்து கடவுளை ஒதுக்கி வைக்க வேண்டும் என பல்வேறு கேள்விகளை சந்திரபாபு நாயுடு தரப்பிற்கு உச்சநீதிமன்றம் கேள்விகளை எழுப்பியது. இதுபோன்ற ஒரு அறிக்கை மாநில அரசால் வெளியிடப்பட்டிருக்க வேண்டுமா?. எனவே இந்த விவகாரத்தில், அரசு நியமித்துள்ள சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டுமா? வேறு குழு அமைக்க வேண்டுமா? என்பது குறித்து மத்திய அரசின் கருத்தை அறிய வழக்கு வரும் அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது, “என தெரிவித்தனர்.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img