அண்ணா சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி போக்குவரத்து காவலர் படுகாயம் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அதிகாரி மீது வழக்கு- விசாரணை.
சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திர பாபு (57). தேனாம்பேட்டையில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் இன்று காலை காரில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார் எஸ் ஐ இ டி கல்லூரி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், பேரி கார்டில் மோதியது. இதில் பேரிகார்டு அருகே நின்று கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் படுகாயம் அடைந்தார். அங்கு பணியில் இருந்த சக காவலர்கள், அழகு குமாரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய சி பி சி எல் அதிகாரி மீது பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டாவது நாளாக சாதி சான்றிதழ் வழங்ககோரி பள்ளியை புறக்கணித்து – போராடும் மாணவர்கள்