நடிகை தமன்னாவிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நடிகை தமன்னாவிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை.நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளது. பண மோசடியில் தொடர்புடையதாக கூறப்படும் செயலி விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளனர்.

HPZ டோக்கன் எனப்படும் செயலி நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதாக தமன்னாவுக்கு அந்த செயலி நிறுவனம் தொகை ஒன்றை செலுத்தி உள்ளது. HPZ டோக்கன் செயலி மூலம் பல்வேறு முதலீட்டார்களை ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த விசாரணையை நடத்திவருகின்றது.

இந்த வழக்கில் இதுவரை 76 சீன நிறுவனங்கள் உட்பட மொத்தம் 299 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு முதலீட்டாளர்களிடம் பண மோசடி செய்வதற்காகவே இந்த செயலி பயன்படுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். இந்த செயலி நிர்வாகம் நடத்திய விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இதில் கலந்து கொண்டதற்காக அவருக்கு ஒரு தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அக்.17 -ல் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமன்னா தனது பெற்றொருடன் ஆஜராகி உள்ளார்.

அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தமன்னா மீது வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img