விமல், யோகி பாபு கூட்டணியின் புதிய படத்தின் – படப்பிடிப்பு நிறைவடைந்தது.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் தற்போது தேசிங்கு ராஜா 2 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் கடைசியாக இவரது நடிப்பில் போகுமிடம் வெகு தூரமில்லை, சார் போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.விமல், யோகி பாபு கூட்டணியின் புதிய படத்தின் - படப்பிடிப்பு நிறைவடைந்தது.

அதேசமயம் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் நுழைந்த நடிகர் யோகி பாபு தற்போது ஹீரோவாகவும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து பெயர் பெற்று வருகிறார்.

இந்நிலையில் விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை அப்துல் மஜித் இயக்கியிருக்கிறார். காமெடி கலந்த கதை களத்தில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த படப்பிடிக்கும் நிறைவடைந்துள்ளது.

இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மேலும் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img