spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

இஸ்ரேலின் அறிவு அழிவை ஏற்படுத்த பயன்படுகிறது- அச்சத்தில் ஈரான்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் அறிவு அழிவை ஏற்படுத்தக்கூடியவை என்று மத்திய கிழக்கு நாடுகள் கண்டித்துள்ளது.

இஸ்ரேலின் அறிவு அழிவை ஏற்படுத்த பயன்படுகிறது- அச்சத்தில் ஈரான்பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், அதற்கு அந்நாடு பதிலடி கொடுப்பதும் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. இப்படி இருக்கையில், 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம், பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஹமாஸ், திடீரென்று இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது. ஒரே நேரத்தில் வான்வழி, தரை வழியாகவும் நடத்திய தாக்குதலில் 1000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதல்தான் தற்போது நடக்கும் இஸ்ரேல்-பாலஸ்தீன போருக்கான தொடக்கப்புள்ளி.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தீவிர போரை அறிவித்தது இஸ்ரேல். இந்த போரில் இது வரை 41,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். பசியும், சுகாதார பாதிப்புகளும் பாலஸ்தீன மக்களை துரத்திக்கொண்டிருக்கிறது.

பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தினால், அண்டை இஸ்லாமிய நாடுகள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. குறிப்பாக லெபனானிலிருந்து இயங்கி வரும் ஹில்புல்லா அமைப்பு, இந்த போரின் போக்கையே மாற்றும் அளவுக்கு தலையீடு செய்தது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா தொடர் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியது. ஒரு கட்டத்தில் ஹமாஸை கூட சமாளித்துவிடலாம் போல.. ஆனால் ஹிஸ்புல்லாவை சமாளிப்பது தலைவலியாக இருக்கிறது என்பதை இஸ்ரேல் உணர்ந்துக்கொண்டது.

எனவே, என்ன செய்வது என்று யோசித்து வந்த இஸ்ரேல் தற்போது பேஜர் தாக்குதலை நடத்தியிருக்கிறது. நவீன டெக்னாலஜி வளர்ந்துவிட்ட காலத்திலும், ஹிஸ்புல்லாக்கள் பேஜர்களைதான் தற்போதுவரை பயன்படுத்தி வருகிறார்கள். காரணம், இதனை ஹேக் செய்ய முடியாது. செல்போனை ஹேக் செய்து, இருப்பிடத்தை துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், பேஜரில் அப்படி செய்ய முடியாது. இருப்பினும் இந்த பேஜரை மொத்தமாக கொள்முதல் செய்த இடத்தில் சில தில்லு முல்லு வேலைகள் நடந்திருக்கின்றன.

இந்த பேஜர்கள் ஹங்கேரியில்தான் அசெம்பிள் செய்யப்பட்டிருக்கின்றன. இப்படி செய்யும்போது வெடிபொருட்கள் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து செப்டம்பர்-19ம் தேதி இஸ்ரேல் இதை வெடிக்க செய்திருக்கிறது. பேஜர் மட்டுமல்லாது வாக்கி டாக்கி, செல்போன், சோலார் பேனலுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரி என அனைத்தும் வெடித்து சிதறியுள்ளன. இந்த தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் மூலம் ஹிஸ்புல்லா மீதும் லெபனான் மீதும் இஸ்ரேல் அதிகாரப்பூர்வ போரை தொடங்கியுள்ளது. வான்வழியாக நடத்தப்பட்ட தாக்குதலில், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் 50 பேர் என மொத்தமாக 569 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஹிஸ்புல்லா தளபதி இப்ராஹிம் முகமது கோபிசி’ கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஹிஸ்புல்லாவும் தளபதியின் மரணத்தை உறுதி செய்திருக்கிறது.

 

Video thumbnail
தண்ணீர் பாட்டில் விவாதம்.. OPS சொன்ன வார்த்தை.. சிரிப்பில் குலுங்கிய பேரவை..
02:27
Video thumbnail
“இனி இதுபோல் நடைபெறாமல் இருக்க அனைத்துவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படும்..”
02:26
Video thumbnail
விஜய்க்கு வாக்களித்த இளைஞர்கள்.. அடைந்த மாற்றம்..
01:40
Video thumbnail
லட்சக்கணக்கான இளைஞர்கள் வைகோவின் பின்னால் அணிதிரண்டனர்
01:37
Video thumbnail
இளைஞர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை எதிர்பார்ப்பார்கள்
02:02
Video thumbnail
விஜய்க்கு வாக்களித்த இளைஞர்கள் | அடைந்த மாற்றம் | TVK | CM Vijay | TamilNadu | Political
13:26
Video thumbnail
பனையூர் TVK அலுவலகத்தில் மின்வெட்டு!
00:20
Video thumbnail
தவெகவில் தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்து கொண்ட மன்சூர் அலிகான் சொன்ன விஷயம்!
01:26
Video thumbnail
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசு ரவுடி போல் செயல்படுகிறது; - பாமக தலைவர் அன்புமணி
01:55
Video thumbnail
"திமுக முழு ஆதரவு தருகிறது" - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
02:41
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img