தமிழக மக்களை எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள் – சசிகலா

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழக மக்களை எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் என சசிகலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்களின் மீது அக்கறை கொண்ட ஒரு உறுதியான பிரதமரை கொண்டு புதிதாக அமையவுள்ள மத்திய அரசின் துணையோடு கச்சத்தீவை மீட்பதும், இலங்கை தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவதும் உறுதி. கச்சத்தீவு இந்திய மண்ணிற்கு சொந்தமானது. இலங்கைக்கு தாரை வார்த்தது செல்லத்தக்கதல்ல, கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என தன் இறுதிமூச்சு வரை போராடியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்பதை அனைவருக்கும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கச்சத்தீவை தாரை வார்த்ததில் முக்கிய அங்கமாக விளங்கிய திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர், இன்றைக்கு அனைத்தையும் வசதியாக மறைத்து விட்டு. தமிழக மக்களை தற்போது எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள் தமிழர்கள் மீதும், குறிப்பாக தமிழக மீனவர்கள் மீதும் எந்தவித அக்கறையுமின்றி, சுயநலப்போக்கோடு இருந்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர்.

இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்களால் தங்கள் இன்னுயிரை இழந்த தமிழக மீனவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். மேலும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட எண்ணற்ற தமிழக மீனவர்கள் இன்றைக்கும் இலங்கை சிறையில் வாடிக் வாடிக்கொண்டு இருக்கிறார்கள். எனவே, கச்சத்தீவை பற்றி பேச திமுகவினருக்கு அருகதை கிடையாது, திமுகவினர் என்னதான் உண்மையை மூடி மறைக்கப்பார்த்தாலும், அந்த முயற்சியில் தோல்வியைத்தான் அடைவார்கள் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். பழங்காலத்திலிருந்தே ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமான கச்சத்தீவு, 1947 வரை ராமநாதபுரம் சமஸ்தானத்தின் அதிகார வரம்பில் இருந்து வந்தது என்பது வரலாற்று உண்மை.

இந்நிலையில்தான் கடந்த 1974-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய நிலப்பரப்பு பகுதியான கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது இந்தியா இந்த ஒப்பந்தத்தில் இந்திய பிரதமரும். இலங்கை அதிபரும் கையெழுத்திட்டனர். ஆனால், ஆனால், தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடித்துக்கொள்ளலாம். கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டுவிழாவில் கலந்துகொள்ளலாம் என்று அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு விளக்கமளித்தது.
ஆனால், நடப்பது என்ன? ஒவ்வொரு நாளும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் இன்றைக்கும்
தொடர்கதையாக நடந்து வருகிறது. இதை அன்றைக்கே உணர்ந்துதான்

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 1991 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக முதன் முதலில் பொறுப்பேற்று கொண்டவுடன், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையிடம் இருந்து இருந்து காப்பாற்றிட கச்சத்தீவை மீட்பதை தவிர வேறு வழியில்லை என முடிவெடுத்து. இதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய பிரதமரை நேரிலும், கடிதம் மூலமாகவும் வலியுறுத்தினார். அதனைத்தொடர்ந்து 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுகவினர் கச்சத்தீவை மீட்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், 2008ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கச்சத்தீவை மீட்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், ‘சுச்சத்தீவு தொடர்பாக 1974 மற்றும் 1976-ல் ஏற்படுத்தப்பட்ட இரு ஒப்பந்தங்கள் ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார் மேலும் கச்சத்தீவு மீண்டும் இந்தியாவின் அங்கமாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் 2011-ஆம் ஆண்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையில் அமைந்த ஆட்சியில், தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழக அரசும் இந்த வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டது. மேலும், இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி தமிழகத்தின் உரிமைக்காக தொடர்ந்து போராடியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த திமுக தலைவர் திரு.கருணாநிதி அவர்கள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே தான் சொல்லித்தான் சில ஷரத்துகள் சேர்க்கப்பட்டது என்று 2013ல் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் பேசியிருப்பதாக திமுகவினர் சொல்லி மார்தட்டிக்கொள்கின்றனர் ஆனால், மறைந்த திமுக தலைவர் திரு.கருணாநிதி அவர்களே கடந்த 1974ல் சட்டப்பேரவையில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட செய்தியை பத்திரிகைகளில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் பதறிப் போனேன் என்று பேசியிருப்பதையும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இதனை குறிப்பிட்டு தமிழக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியதையும் இந்நேரத்தில் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். கச்சத்தீவு என்பது தமிழக மக்களின் வாழ்வாதார உரிமை சம்பந்தப்பட்டது. இது வெறும் தேர்தல் நேரத்திற்கு மட்டும் எடுத்துக்கொள்ளப்படும் பிரச்னை அல்ல என்பதை அனைவரும் உணரவேண்டும் கச்சத்தீவு மீட்கப்படவேண்டும் என புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் என்றைக்கும் வீண் போகாது.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும். பாதுகாப்பினையும் உறுதி செய்திடும் வகையில் புதிதாக அமையவுள்ள மத்திய அரசு கச்சத்தீவை மீட்டெடுக்க
தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். கடந்த 2016ஆம் ஆண்டு நாம் மேற்கொண்ட அதீத முயற்சியால் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் போது தமிழர்கள் சென்று கலந்து கொள்வதற்கு தேவையான உரிய அனுமதியையும் பெற்று தந்ததை இந்நேரத்தில் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் அதேபோன்று. என் தமிழ் இனத்திற்கு மற்றொரு உண்மையையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். அதாவது, தமிழக மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கச்சத்தீவை மீட்டெடுக்கவும், இலங்கை தமிழர்களின் குடியுரிமையை நிலைநாட்டிடவும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கு முன்பாகவே

ஒரு சிறந்த செயல் திட்டம் வகுக்கப்பட்டது. இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த திட்டமாகவும் உருவானது. இந்த செயல் திட்டமானது இலங்கையைச் சார்ந்தவர்களும் ஏற்றுக்கொண்டு உருவானது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் அதை செயல்படுத்த தேவையான அனைத்துவித முன்னெடுப்புகளும் தயார் நிலையில் இருந்தன. ஆனால் துரதிருஷ்டவசமாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நம்மை விட்டு மறைந்தார். அதன் பிறகு அதனை செயல்படுத்தக்கூடிய சூழ்நிலைகளும் நமக்கு அமையாமல் போய்விட்டது. அதே நேரத்தில் நாங்கள் செயல்படுத்தவேண்டிய திட்டம் இன்றும் உயிர்போடுதான் இருக்கிறது. அதை முன்னெடுத்து இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தக்கூடிய வகையில் ஒரு வலுவான நிலையான மத்திய அரசாங்கம் தற்போது தேவைப்படுகிறது. அதேபோன்று, இந்தியாவின் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய, இந்திய மக்களின் மீது அக்கறை கொண்ட ஒரு வலிமையான பிரதமரையும் நாம் தேர்தெடுக்க போகிறோம். அவ்வாறு தேர்தெடுக்கப்படும் உறுதியான பிரதமரை கொண்டு புதிதாக அமையவுள்ள மத்திய அரசின் துணையோடு கச்சத்தீவை மீட்பதுடன், இலங்கை தமிழர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்பதை இந்நேரத்தில் அனைவருக்கும் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்..

 

Video thumbnail
பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு 9.69 சதவீதமாக உயர்வு
00:44
Video thumbnail
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் டிஜிட்டல் முறையில் பாடத்திட்டம்
00:37
Video thumbnail
தமிழே தெரியாதவர்களுக்கு தமிழ்நாட்டு அரசு பணியா?
00:55
Video thumbnail
திராவிட மாடல் அரசு 4 ஆண்டுகள் சாதனை! வேதனை!!
00:31
Video thumbnail
திராவிட மாடல் அரசு 4 ஆண்டுகள் சாதனை! வேதனை! | தொழிலாளர்களை கண்டுக்கொள்ளாத முதல்வர் | DMK | MK Stalin
14:34
Video thumbnail
தீவிரவாதிகளுக்கு ஆதரவான கட்சி திமுக - சங்கிகள் சதித்திட்டம்
00:51
Video thumbnail
மதுரை ஆதீனத்தை இஸ்லாமிய தீவிரவாதிகள் கொ*ல முயற்சியா
00:39
Video thumbnail
வன்முறையை விதைக்கும் பாஜகவினர்
00:51
Video thumbnail
2026 தேர்தல் | கலவரத்தை தூண்ட சங்கிகள் திட்டம்
00:34
Video thumbnail
2026 தேர்தல் | கலவரத்தை தூண்ட சங்கிகள் திட்டம் | வசமாக சிக்கிய மதுரை ஆதினம் | Madurai Adheenam
13:51
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img