spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஒரே நாளில் இரண்டு முறை பதவி ஏற்ற அமைச்சரால் சர்ச்சை

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மத்திய பிரதேசம் , மாநிலத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த ராம்நிவாஸ் ராவத் என்ற எம்.எல்.ஏ., ஒரே நாளில் இரு முறை அமைச்சர் பதவி ஏற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே நாளில் இரண்டு முறை பதவி ஏற்ற அமைச்சரால் சர்ச்சை
மத்திய பிரதேசம் மாநிலம் விஜய்பூர் தொகுதி எம்.எல்.ஏ., ராம்நிவாஸ் ராவத். காங்கிரசின் செயல் தலைவராக பதவி வகித்தார். சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க,வில் இணைந்தார். அதேநேரத்தில் எம்.எல்.ஏ., பதவியை இன்னும் ராஜினாமா செய்யவில்லை.

இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் இணை அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் மங்குபாய் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆனால், அடுத்த 15 நிமிடங்களில் மீண்டும் அவர் கேபினட் அமைச்சராக பதவியேற்றார்.

முதலில் பதவியேற்ற ராம் நிவாஸ் ராவத், தவறுதலாக பதவி ஏற்றதால் அவர் மீண்டும் பதவியேற்றார் என தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் கூறும் போது, முதலில் பதவியேற்ற போது ஒரு வார்த்தையை தவற விட்டு விட்டதால், மீண்டும் பதவியேற்று கொண்டதாக கூறினார்.

ஒரே நாளில் இரண்டு முறை அவர் பதவியேற்றது தான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆக இருந்து கொண்டு அவர் எப்படி பா.ஜ.க, அமைச்சரவையில் இடம்பெற முடியும் என கேள்வி எழுந்துள்ளது.

Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
Video thumbnail
கண்ணீரோடு இரங்கல்.. வீடியோ வெளியிட்ட கலா மாஸ்டர்
02:22
Video thumbnail
ஆவடி ரயில் நிலையம் அருகே துணி கடையில் பயங்கர தீ விபத்து. மின் இணைப்பு பெட்டி வெடித்ததால் தீ விபத்து
00:42
Video thumbnail
போதை பொருள் பயன்படுத்தினேனா? - அமைச்சர் சரத்குமார் விளக்கம்
01:25
Video thumbnail
அனைத்து பேருந்திலும் மகளிருக்கு இலவச பயணம் விரைவில் அறிவிக்கப்படும்.. - விஜய் தமிழன் பார்த்திபன்
00:54
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img