spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ரயில்வே கால்வாயில் விழுந்த பசுமாட்டை : போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ரயில்வே கால்வாயில் விழுந்த பசுமாட்டை :  போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்.ஆவடி ரயில்வே கால்வாயில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விழுந்து சிக்கிய பசுமாட்டை தீயணைப்பு துறை வீரர்கள் போராடி மீட்டனர். மாட்டை மீட்கும் வரை அவ்வழியாக சென்ற ரயில் சிறிது நேரம் காத்திருந்து.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக 25 செ.மீ அளவிற்கு கன மழை பெய்தது.இந்தநிலையில் ஆவடி அடுத்த அண்ணனூர் ரயில் நிலையம் ஆவடி நோக்கி செல்லக்கூடிய தண்டவாளம் அருகில் மாடு கத்தும் சத்தம் கேட்டுள்ளது. அருகில் இருந்த இரயில்வே பணியாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது மிகவும் குறுகிய கால்வாயின் உள்ளே பெரிய பசுமாடு சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடனடியாக இதுகுறித்து அங்கிருந்த இரயில்வே பணியாளர்கள் ஆவடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவ்வழியே வந்த ரெயில்களை நிறுத்தினர்.பின்னர் குறுகிய கால்வாயில் உள்ளே சிக்கி இருந்த பசுமாட்டை மீட்க போராடினர்.

பிரக்ஞானந்தா தனது செஸ் : வழிகாட்டியான விஸ்வநாதன் ஆனந்தை வென்றாா்.

எனினும் மீட்பது கடினமான நிலையில் கால்வாயை அகலப்படுத்தி மாட்டின் கொம்பில் கயிற்றை கட்டி போராடி மீட்டனர்.இதனை தொடர்ந்து அந்த மாடு துள்ளி குதித்து ஓடியது. இதன் பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் அந்த தண்டவாளத்தில் கடந்து சென்றது. கால்வாயில் சிக்கி கொண்ட மாட்டை போராடி மீட்ட சம்பவம் நெகழ்சியை ஏற்படுத்தி உள்ளது. குறுகிய கால்வாயில் சிக்கி கொண்டு உயிருடன் போராடிய மாட்டை, உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு ரயில்வே பணியாளர்கள் கை தட்டி நன்றி தெரிவித்தனர்.

Video thumbnail
ஜாக்கி மூலம் பழமையான கோவில்கள் பாதுகாப்பாக உயர்த்தல்; இடிக்காமல் கோவிலை உயர்த்தும் நவீன ஜாக்கி முறை
00:59
Video thumbnail
வங்கதேசத்தின் தௌலத்தியா காட் பகுதியில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 23 பேர் உயிரிழந்தனர்
01:44
Video thumbnail
தேர்தல் களம் 2026; தவெக என்ன செய்கிறது? #vijay #tvk
01:15
Video thumbnail
தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப் போவதில்லை என கமல் அறிவிப்பு
00:46
Video thumbnail
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..
00:45
Video thumbnail
எனர்ஜி தட்டுப்பாடு
01:25
Video thumbnail
எல்பிஜி புதிய முன்பதிவு விதிகளில் மாற்றம்
00:56
Video thumbnail
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு |திமுக தொகுதிப் பங்கீடு முடிவு |தவெக என்ன செய்கிறது? DMK ADMK TVK
12:59
Video thumbnail
தி.மு.க - வி.சி.க தொகுதி ஒப்பந்தம்
00:51
Video thumbnail
தேர்தல் களம் 2026 | திமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி | DMK Vs ADMK | MK Stalin | Edappadi Palaniswami
07:51
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img