சர்ச்சை எல்லாம் ஒருபுறம் இருக்க – மகளுக்கு பெயர் வைத்த இர்ஃபான்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

யூடியூபில் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர்களின் இர்ஃபானும் ஒருவர். இவருக்கு சப்ஸ்கிரைபர்ஸ் அதிகமாக இருந்தாலும் இவர் பல சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கம்.சர்ச்சை எல்லாம் ஒருபுறம் இருக்க - மகளுக்கு  பெயர்  வைத்த இர்ஃபான்!

அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தனது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டு இருந்தார். இந்தியாவில் கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிவது சட்டவிரோதமான செயலாக இருந்தாலும் துபாயில் இந்த செயல் வழக்கத்தில் உள்ளது. எனவே அவர் துபாய் சென்று இருந்த சமயத்தில் அந்த வீடியோவை எடுத்து வெளியிட்டதால் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி ; முதல்கட்டமாக அமலாக்கத்துறையை அனுப்பி சோதனை..!!

ஆனால் அந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இர்ஃபான் அந்த வீடியோவை யூடியூபில் இருந்து நீக்கினார். மேலும் இது போன்ற தவறை இனி செய்ய மாட்டேன் எனவும் தெரிவித்து இருந்தார். ஆனால் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் இர்ஃபான். அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவரது மனைவி ஆசிபாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை பிறந்து மூன்று மாதங்களைக் கடந்த நிலையில் சமீபத்தில் மருத்துவமனையில் குழந்தை பிறந்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதன்படி மருத்துவமனையில் பிரசவ அறைக்குள் சென்று குழந்தை பிறந்த உடனே தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் வெட்டுவது போன்ற வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் மருத்துவரே கத்திரிக்கோலை எடுத்துக் கொடுக்கிறார். இந்த வீடியோ பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் பல்வேறு இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் அந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கும் பத்து நாட்களுக்கு மருத்துவம் செய்ய தடை விதித்து ஊரக நலப்பணித்துறை இயக்ககம் உத்தரவிட்டிருந்தது.

இவ்வாறு தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் அந்த சர்ச்சைகளை ஓரமாக வைத்துவிட்டு இர்ஃபான் தனது குழந்தைக்கு பெயர் சூட்டிய வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி இர்ஃபான் தனது மகளுக்கு ஐஃபா என்று பெயர் சூட்டியுள்ளார். ஐஃபா என்றால் RICHNESS என்ற பொருள்படும். எனவே இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இர்ஃபானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Video thumbnail
கலை கண்ணாடி அல்ல; சமூகத்தை மாற்றும் சம்மட்டி - -மார்கழியில் மக்களிசை விழாவில் எம்.பி கனிமொழி பேச்சு
01:19
Video thumbnail
இங்க பா.ஜ.க.வும் அடிமைகளும் எத்தனை அந்தர் பல்டி அடிச்சாலும், பாச்சா பலிக்காது - CM மு.க.ஸ்டாலின்
01:28
Video thumbnail
கபில் தேவ், நடிகர் சிம்புவுக்கு பந்து வீசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! வைரலாகிவரும் வீடியோ!!
00:59
Video thumbnail
கிறிஸ்தவர்கள் மீது இந்து அமைப்புகள் தாக்குதல் | மௌனம் காக்கும் விஜய், சீமான் | TVK | Vijay | Seeman
13:10
Video thumbnail
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க புறப்பட்டார் நடிகை பூஜா ஹெக்டே
00:36
Video thumbnail
சுனாமி 21வது ஆண்டு நினைவு தினம் | பாஜக சார்பில் அஞ்சலி செலுத்திய நிர்வாகி குஷ்பு
01:09
Video thumbnail
இது 'One Last Chance' னா.. 'ஜனநாயகன்' ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக மலேசியா புறப்பட்ட அனிருத்
01:12
Video thumbnail
மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவிற்காக சென்னையில் இருந்து புறப்பாட்டார் விஜய்
00:46
Video thumbnail
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடுக்கும் வகையில் இந்துத்துவா கும்பல்
02:01
Video thumbnail
மகனின் பிறந்தநாளை நடுரோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடிய தொழிலதிபர்..
00:53
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img